Pages

Tuesday, January 8, 2013

CV

உயிருடன் கொள்ளி இட்டாலும் இவ்வளவு வலிக்காது
உன் மௌனம் என்னை கொல்கிறது!

CV

உன்னைப் பார்த்த நொடி முதல்
பார்க்கும் அத்தனையிலும் நீதான்!
ஆனால், உன்னைப்பார்க்கும் போதுமட்டும்,
                    "நான்"


உனக்காக பூத்த ரோஜாவை எனக்காக கொடுத்தாய்!
பூவின் காம்பில் உன் நகத்தின் காயம்!
உன் நகக்காயங்கள் பூக்களுக்குமட்டும்தானா???



என் தனிமைகளை தனிமைப்படுத்தியவனே,
உள்ளத்தின் அழுகையை அடக்கி,
உதட்டால் சிரிக்கும் இந்த வித்தையை,
எங்குதான் கற்றேனோ?

Sunday, April 15, 2012

உன் நினைவால்...

உன் ஆசைகளிலும் கனவுகளிலும்
ஒரு லாரி மண்ணை வாரி இறைத்தவள்
நான்!
ஏதோ ஒரு மாற்றத்தை விரும்பிய உனக்கு
ஏமாற்றத்தைப் பரிசளித்தவள்
நான்!
ஐந்தரை அடி உயரத்தில்
உன் உயிர் குடிக்கும்
எமனாய் வந்தவள்
நான்!
காதல் என்னும் சிகப்பு கம்பளத்தினுள்
மரணத்தை ஒளியவைத்து
உன்னை நெருங்கியவள்
நான்!
உன் கண்ணீர் ஆறு வற்ற வற்ற
அதால் என் தாகம் தணித்தவள்
நான்!

இத்தனையும் செய்த எனக்காக
இன்றும் பனிக்கிறது உன் கண்கள்!!!

அப்போதெல்லாம் கலங்காத என் இதயம்
கசிகிறது இப்போது!
உதிரத்தால்!!!

Sunday, July 3, 2011

Possessiveness...

அந்நியர்களை அழிக்க அவதாரம் எடுக்கவேண்டும் போல் தோன்றுகிறது
அந்நியனாய்!
அந்நியர்கள் யாரெனக் கேட்காதே!
என்னைத்தவிர உனக்கு அனைவரும் அந்நியரே!!!

அழுகை...




பறவையாய்ப் பிறந்திருந்தால் சோகங்களைப் பறக்க விட்டிருப்பேன்,
பெண்ணாய்ப் பிறந்த பாவம்;
தலையணை நனைக்கக் கூட இரவு வரைக் காத்திருக்க வேண்டியிருக்கிறது!

Saturday, July 2, 2011

நினைவு...

உயிரற்ற பரிசுப் பொருட்களும் வாழ்த்து அட்டைகளும்
இறந்து போன நம் காதலை நினைவுப் படுத்துகின்றன...

Sunday, June 6, 2010

துக்கடாக்கள்...

ஏதோ ஒரு இரவு நேரப் பயணத்தில், எல்லோரும் உண்ணுவிட்டு உறங்க,

என் இமைகள்மட்டும் உண்ணாவிரதம் இருந்து, உறங்க மறுத்தன!!!


எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தைத் தருமாமே?
நம்பவில்லை நான்!
உன்னை எதிரே பார்த்தபோது...

மலரென உன்னை வர்ணிக்க மாட்டேன்
மாலையில் நீ இன்னும் அல்லவா அழகாக இருப்பாய்!!!


என்னைக் கவிஞனாய் மாற்றியது உன் பிரிவு தான் என்றாலும்,
இந்த உலகத்தில் கவிஞனுக்கா பஞ்சம்?
வெறும் மனிதனாகவே இருந்துவிடுகிறேன்..
வந்துவிடு!!