Wednesday, March 31, 2010

இள ரத்தம்...

இப்படி நூறு அப்துல்லாக்கள் போதும்...
இந்தியா வல்லரசாவதை யாரும் தடுக்க முடியாது!!!

http://www.youtube.com/watch?v=9b4xTSWlZ5k&feature=channel

http://www.youtube.com/watch?v=62ZWM-QiszA&feature=channel

என் மன வானில்...



கவிதை என்றாலே என்னவென்று தெரியாத நான்,
இன்று வரி வரியாய் கவிதை வரைகிறேன்...
இந்த பக்கங்களை உன் விரல்கள் தீண்டத் தேவையில்லை,
பதங்கள் போதும்!!!


ஓராயிரம் முறை உன்னைக் கடக்கிறேன்...
ஒரு முறையாவது நீ என்னை பார்க்க மாட்டாயா என்று!!!


காதலும் ஒரு வகை தியானம் தான்!!!
மனதை ஒருமுகப்படுத்த வேண்டுமே!
நானும் தியானம் செய்கிறேன்!!!
ஒருமுகத்தோடு... உன் ஒருவனின் முகத்தோடு!!!


உன்னை பற்றி ஒரு கவிதை எழுத வேண்டி அமர்ந்தேன்,
வார்த்தைகள் இல்லாமல் தடுமாறினேன்... தவித்தேன்!!!
கைகளில் வெற்று காகிதம்!!!
இப்போது புரிகிறது!!!
ஒரு கவிதையைப் பற்றியே கவிதை எழுத என்னிடம் கற்பனைத் திறன் இல்லையென்று!!!

நானும் கவிதை எழுதுகிறேன்!!!


என்னை விட்டு நீ சென்ற கணத்திலிருந்து
கண்ணில் கசிந்து கொண்டிருக்கிறது கங்கை...
அது வெள்ளப் பெருக்காகுமுன்னே வந்து சேர்ந்துவிடு!!!

வெறும் முத்தத்திற்கே இரண்டு இதழ்கள் வேண்டுமே!!!
காதல் யுத்தத்திற்கு???
ஒரு இதயமா...
போதவே போதாது!!!
ஆதலினால் வந்து சேர்ந்து விடு!!!