Sunday, April 15, 2012

உன் நினைவால்...

உன் ஆசைகளிலும் கனவுகளிலும்
ஒரு லாரி மண்ணை வாரி இறைத்தவள்
நான்!
ஏதோ ஒரு மாற்றத்தை விரும்பிய உனக்கு
ஏமாற்றத்தைப் பரிசளித்தவள்
நான்!
ஐந்தரை அடி உயரத்தில்
உன் உயிர் குடிக்கும்
எமனாய் வந்தவள்
நான்!
காதல் என்னும் சிகப்பு கம்பளத்தினுள்
மரணத்தை ஒளியவைத்து
உன்னை நெருங்கியவள்
நான்!
உன் கண்ணீர் ஆறு வற்ற வற்ற
அதால் என் தாகம் தணித்தவள்
நான்!

இத்தனையும் செய்த எனக்காக
இன்றும் பனிக்கிறது உன் கண்கள்!!!

அப்போதெல்லாம் கலங்காத என் இதயம்
கசிகிறது இப்போது!
உதிரத்தால்!!!