Friday, April 2, 2010

கனவு... கவிதை...

கனவு என்பது இதயத்தில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாம்!
இதயமே இல்லாதவனின் கனவில் எப்படி எதிர்பார்ப்பேன் என்னை???


யாராரோ படித்து விட்டு பாராட்டினார்கள்...
உனக்கென நான் எழுதியக் கவிதைகளை!!!

Thursday, April 1, 2010

Dreamzz...

வெறும் கனவில் நீ வந்ததற்கே சந்தோஷப்படும் என் மனதிடம் எப்படி சொல்வேன்...

கடைசி வரை நீ கனவு மட்டுமே காணப் போகிறாய் என்று???

காதல்!!!

என்றும் உனக்காக காத்திருப்பேன் என்று கூறினேன்,
என் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன்...
காத்துக்கொண்டிருக்கிறேன்... கல்லறையிலும்!!!



உன்னைக் கவிதை என்று வர்ணித்ததாலோ என்னவோ,

நீயும் பொய்யாகி விட்டாய்!!!

காதலே!!!

என்னது? நான் உன்னை மறந்து விட்டேனா?
யார் சொன்னது???
மறந்திருந்தால் இறந்தல்லவா போயிருப்பேன்!!!


என் காதல் உனக்குப் புரியவில்லை என்றாலும் பரவாயில்லை...
உன்னிலும் என்னிலுமாக, மாறி மாறிப் பயணித்த காற்றுக்குக் கூடவா???

உன் இதயம்...

எறும்பு ஊற கல்லும் தேயுமாமே???
எனக்கு தெரியாமல் போய் விட்டது,
உன் இதயம் ஒரு பாறை என்று!!!

காதல்...

எனக்கு உயிர் கொடுத்தவள் என் தாய்...
உணர்வு கொடுத்தவன் நீயடா!!!

என் மனதில் உள்ள ரணத்திற்கு,
மரணமே தேவலை!!!




காதலுக்கு கண்ணில்லையாம்...
கண் மட்டுமா இல்லை?
காதலிடம் காதலைத் தவிர வேறொன்றும் இல்லை!!!


நீ இறந்து நான் வாழ்வதை விட,
நீ இருந்து நான் சாவதே மேல்!!!


காற்றில் பூ வாசம்!
இயற்கை தானே?
மழையில் மண் வாசம்!
இயல்பு தானே?
ஆனால், என்னில் உன் வாசம்!!!
இது எப்படி சாத்தியம்???
உண்மைச் சொல்!!!

The Advertisements i did...

Product - 3rd Eye Watches...
Suggestive Copy:
Says something about a product, but doesn't directly appeal to the customer's mind. Simply suggests that if the customer were to buy the product, he would certainly be benifited by it.
http://www.youtube.com/watch?v=ejoRfSA2Dso&feature=channel

Narrative Copy:
Narrates a story or an incident with the help of the product presented. Customer is expected to react sympathitically to the narration and be tempted to buy and try the product.
http://www.youtube.com/watch?v=BkP7IU4s6Ko&feature=channel